Sunday, October 17, 2010

அறிமுகம்

இந்த தளம் புதிதாக லைஃப் இன்சுரன்ஸ் முகவராக பணிபுரிய விரும்பும் நபர்களுக்கு IRDA என அழைக்கப் பெறும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சார்ந்த காப்பீட்டு முகவர்களுக்கான தேர்வுக்கான ஒரு விளக்கம் தரும் துணைவனாக செயல்பட உள்ளது. தமிழில் ஆன்லைன் தேர்வுக்கு செல்லும் நபர்களுக்கு நிச்சயமான துணையாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்த தளத்தைப் பயன்படுத்தி பலன் பெற அன்புடன் அழைக்கிறோம்.

முன்னுரை 

IRDA - Insurance Regulation & Development Authority. ஒருவர் ஆயுள்காப்பீட்டு முகவராக பணிபுரிய வேண்டுமெனில், அவர் 18 வயது நிரம்பியவராக இருத்தல் அவசியம். நகரம், கிராமம் என்பதைப் பொறுத்து அவரது கல்வித் தகுதிக்கான சான்றிதழ் கேட்கப்படும். முகவர் பணிக்கு சேர்த்துக் கொள்ளும் நிறுவனத்தின் சார்பில் (உதாரணம்: எல் ஐ சி) IRDA நடத்தும் ஆன்லைன் தேர்வில் கலந்துகொள்ள 50 மணி நேர   காப்பீட்டு நடைமுறைகள் சார்ந்த வகுப்பில் பயிற்சி பெறவேண்டும். தமிழிலேயே ஆன்லைன் தேர்வு எழுதும் வசதி தற்போது உள்ளது. ஆன்லைன் தேர்வு முறை எப்படி என்று அறிய விரும்புவோர் இந்த இணைப்பை கிளிக் செய்து பார்க்கலாம்.


Disclaimer:
This is to informed that no material is copied from the booklet, issued by the IRDA. But, the subject is described by the guide's own view. The motto is to encourage the people those who are willing to appear the examination by online in Tamil.